Reconstructing the timeline of the Hijri calendar during the lifetime of the Prophet ﷺ has always been a puzzle, mostly because surviving historical records don't always align perfectly with astronomical realities [1]. This work is an effort to bridge that gap. By compiling a comprehensive set of crescent visibility maps spanning from 13 BH to 11 AH (609–632 CE) as well as maps for 53 BH to mark the year of the Prophet’s ﷺ birth, this project offers a reliable, scientific baseline for early Islamic history.
These crescent visibility maps are generated using the Odeh criterion for astronomical back-calculations, bringing early chronology into direct alignment with modern science. Instead of relying on guesswork, it provides exact, data-driven visuals that map out crescent visibility during the prophetic era. My hope is that this serves as a valuable, practical tool for historians, astronomers, and theologians alike.
| Download Crescent Visibility Maps for the Prophetic Era (203MB)📥|
SHA256: 137482d83eab64f31748df0e631769b2179d983befa2f0bd647d498384bf5f8c
நபித்துவக் காலப் பிறை வரைபடங்கள்: ஆரம்பகால இஸ்லாமிய நாட்காட்டியின் மறுகட்டமைப்பு (13 BH – 11 AH)
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்நாளில் இருந்த ஹிஜ்ரி காலவரிசையைத் துல்லியமாகக் கணக்கிடுவது எப்போதுமே ஒரு சவாலாகவே இருந்துள்ளது. ஏனெனில், நமக்குக் கிடைத்துள்ள ஆரம்பகால வரலாற்றுப் பதிவுகள் பல நேரங்களில் வானியல் தரவுகளுடன் முழுமையாக ஒத்துப்போவதில்லை [1]. இந்த ஆய்வு அந்த இடைவெளியைக் குறைத்து, இரண்டையும் சீரமைக்க முயல்கிறது.
இந்தத் தொகுப்பில், ஹிஜ்ரி 13 BH முதல் 11 AH (609-632 CE) வரையிலான காலகட்டத்தில் வானில் பிறை தென்படும் தன்மையைக் காட்டும் விரிவான வரைபடங்கள் உள்ளன (crescent visibility maps). அத்துடன், நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிறந்த ஆண்டைக் குறிக்கும் வகையில் 53 BH-க்கான வரைபடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றை அறிவியல் பூர்வமாக நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தக் பிறை தென்படும் வரைபடங்கள், வானியல் கணக்கீடுகள் Odeh criterion [2] மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஆரம்பகால காலவரிசையை உண்மையான வானியல் அறிவியலுடன் நேரடியாகச் சீரமைக்க உதவுகிறது. வெறும் ஊகங்களை நம்பியிருக்காமல், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் காலத்தின் பிறை தென்படும் தன்மையை விவரிக்கும் துல்லியமான, தரவு சார்ந்த visibility mapsகளை இது வழங்குகிறது. இந்தத் தொகுப்பு வரலாற்றாசிரியர்கள், வானியலாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைவருக்கும் ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
| Download Crescent Visibility Maps for the Prophetic Era (203MB)📥|
SHA256: 137482d83eab64f31748df0e631769b2179d983befa2f0bd647d498384bf5f8c
References:
1. Van Gent, R.H. (2024) The Arabian Calendar During the Life of Muḥammad and Early Islam. Available at: https://webspace.science.uu.nl/~gent0113/islam/islam_tabcal_early_islam.htm (Accessed: 18 July 2026).
2. Odeh, M.Sh. (2004) New Criterion for Lunar Crescent Visibility, Experimental Astronomy, 18(1), pp. 39–65. doi: 10.1007/s10686-005-9002-5.
19/JUL/2026